3954. |
வெற்றரை
யாகிய வேடங்காட்டித் |
|
திரிவார்
துவராடை
உற்றரை யோர்க ளுரைக்குஞ்சொல்லை
யுணரா தெழுமின்கள்
குற்றமி லாததோர் கொள்கையெம்மான்
குழகன் றொழிலாரப்
பெற்றர வாட்டிவரும் பெருமான்றிரு
நாரை யூர்சேர்வே. 10 |
10.
பொ-ரை: ஆடையற்ற கோலத்துடன் திரியும் சமணர்களும்,
மஞ்சட் காவியாடை போர்த்துத்
திரியும் புத்தர்களும் உரைக்கின்ற
சொற்களை ஏற்க வேண்டா. குற்றமில்லாத கொள்கை உடைய எம்
தலைவரும், இளமையானவரும், அடியவர்கட்கு அருள்புரியும்
தொழிலையுடையவரும், அரவம் அணிந்துள்ளவருமான சிவபெருமான்
வீற்றிருந்தருளுகின்ற திருநாரையூர் என்னும் திருத்தலத்தைச் சேர்ந்து,
வழிபட்டு உய்வீர்களாக.
கு-ரை:
வெற்றரையாகிய வேடம் - நிர்வாணக்கோலம்.
காட்டித் திரிபவர் சமணர். துவர் ஆடை உற்ற அரையோர்கள் -
புத்தர்கள். உற்றரை - உற்ற + அரை, பெயரெச்ச விகுதி அகரம்
தொக்கது. (தொழில் ஆரப்பெற்று) அரவு ஆட்டிவரும் பெருமான்
என்பது பச்சைத்தாள் அரவாட்டீ என்ற திருவாசகத்திலும்(தி.8)
வருவது. சிவபெருமான் பாம்பை ஆட்டிவரும் தன்மை தன் அடியார்
அஞ்சத் தக்க வினைகளைப்போக்கும் தொழிலையுடையவன்
தானேயென்பது அறிவித்தற்கு. அக்கருத்தே தொழில் ஆரப்பெற்றும்
என்பதாற் குறித்த பொருளாம். தொழில் - தான் அடியார்க்குச்
செய்யும் அருள். ஆரப் பெற்று - அதை நிறைவேற்றி.
|