3968. |
வந்துமா
லயனவர் காண்பரியார் |
|
வெந்தவெண்
ணீறணி மயேந்திரரும்
கந்தவார் சடையுடைக் கயிலையாரும்
அந்தணா ரூராதி யானைக்காவே. 2 |
2.
பொ-ரை: சிவபெருமான், திருமாலும், பிரமனும்
காண்பதற்கு அரியவர். அவர் வெந்த திருவெண்ணீற்றினை
அணிந்தவராய்த் திருமயேந்திரத்திலும், நறுமணம் கமழும்
சடையுடையவராய்த் திருக்கயிலையிலும், அழகிய, குளிர்ச்சிமிக்க
திருவாரூரிலும், பழமை வாய்ந்த திருவானைக்காவிலும் விளங்குபவர்.
கு-ரை:
கந்தவார் சடை - வாசனை பொருந்திய நெடிய
சடை.
|