| 
         
          | 3969. | மாலயன் 
            றேடிய மயேந்திரரும் |   
          |  | காலனை 
            யுயிர்கொண்ட கயிலையாரும் வேலைய தோங்கும்வெண் ணாவலாரும்
 ஆலையா ரூராதி யானைக்காவே.              3
 |        3. 
        பொ-ரை: திருமாலும், பிரமனும் தேடிய சிவபெருமான் திருமயேந்திரத்தில் வீற்றிருந்தருளுகின்றார். அவரே
 மார்க்கண்டேயருக்காகக் காலனை மாய்த்த கயிலைநாதர். பஞ்சபூதத்
 தலங்களுள் அப்புத்(நீர்) தலமாக விளங்கும் திருஆனைக்காவில்
 வெண்ணாவல் மரத்தின்கீழ் வீற்றிருந்தருளுபவர். கருப்பங்கழனிகளை
 உடைய திருவாரூரில் வீற்றிருந்தருளுபவரும் அவரே.
       கு-ரை: 
        வேலை (அது) ஓங்கும் வெண்ணாவல் - கடல்போல் நீர் பொங்கப் பெற்ற வெண்ணாவல். பஞ்சபூதத் தலங்களில்
 அப்புத்தலம் ஆதலாலும், செழுநீர்த் திரளைச்சென்று ஆடினேனே
 (தி.6.ப.63.பா.1) என அப்பர் அடிகள் கூறியவாறு, இறைவனே
 நீர்வடிவாய் இருத்தலாலும், வேலையது ஓங்கும் என்று கூறப்பட்டது.
 ஆலை ஆரூர் - கருப்பங் கழனிகளையுடைய திருவாரூர். ஆலை
 என்பது தானியாகு பெயர்.
 |