| 
         
          | 3972. | சக்கரம் 
            வேண்டுமால் பிரமன்காணா |   
          |  | மிக்கவர் 
            கயிலை மயேந்திரரும் தக்கனைத் தலையரி தழலுருவர்
 அக்கணி யவராரூ ரானைக்காவே.            6
 |  
            6. 
        பொ-ரை: சக்கராயுதத்தை வேண்டிப் பெற்ற திருமாலும், பிரமனும் காணாத வண்ணம் விளங்கிய, யாவரினும் மேம்பட்டவரான
 சிவபெருமான், திருக்கயிலைமலையிலும், திருமயேந்திரத்திலும்
 வீற்றிருந்தருளுகின்றார். அவர் தக்கனின் தலையை அரிந்தவர்.
 நெருப்புருவானவர். உருத்திராக்கமாலை அணிந்தவர். திருவாரூரிலும்,
 திருவானைக்காவிலும் வீற்றிருந்தருளுபவர்.
       கு-ரை: 
        சக்கரம் வேண்டும் மால் - சக்கராயுதத்தை வேண்டிப் பெற்ற திருமாலும். காணா - காணப்படாத. மிக்கவர் - யாவரினும்
 மேம்பட்டவராகிய. அக்கு அணியவர் - உருத்திராக்கங்களை
 அணியாகக் கொண்டவர்.
 |