3973. |
கண்ணனு
நான்முகன் காண்பரியார் |
|
வெண்ணாவல்
விரும்பு மயேந்திரரும்
கண்ணப்பர்க் கருள்செய்த கயிலையெங்கள்
அண்ணலா ரூராதி யானைக்காவே. 7 |
7.
பொ-ரை: கருநிறத் திருமாலும், பிரமனும் காண்பதற்கு
அரியவரான சிவபெருமான் திருமயேந்திரத்தில்
வீற்றிருந்தருளுகின்றார். அவர் கண்ணப்பர்க்கு அருள்செய்த
கயிலைநாதர். எங்கள் தலைவரான திருவாரூரர். அவர் வெண்ணாவல்
மரத்தின்கீழ் வீற்றிருக்க விரும்பும் திருவானைக்காவிலுள்ள
ஆதிமூர்த்தி ஆவார்.
கு-ரை:
கண்ணன் - கரிய நிறத்தையுடைய திருமால்.
கிருட்டிணன் என்பதன் சிதைவு.
|