3975. |
ஆதிமா
லயனவர் காண்பரியார் |
|
வேதங்கள்
துதிசெயு மயேந்திரரும்
காதிலொர் குழையுடைக் கயிலையாரும்
ஆதியா ரூரெந்தை யானைக்காவே. 9 |
9.
பொ-ரை: தொன்றுதொட்டுத் திருமாலும், பிரமனும்
காண்பதற்கு அரியவராய் ஓங்கிய சிவபெருமான், வேதங்களால்
துதிக்கப்பெறும் மயேந்திரரும், காதில் குழையணிந்த கயிலைநாதரும்,
ஆதியாகிய திருவாரூர் எந்தையும் ஆவர். அவரே திருவானைக்
காவல் வீற்றிருந்தருளுகின்றார்.
கு-ரை:
ஆதிமால் அயன் அவர் - தொன்றுதொட்டுத்
திருமால் அயன் முதலியோர், காண்பரியார். ஆதி - (நான்காம்
அடியில் வரும் ஆதி). முதன்மையானவர் என்னும் பொருளது.
|