3976. |
அறிவி
லமண்புத்த ரறிவுகொள்ளேல் |
|
வெறியமான் கரத்தாரூர்
மயேந்திரரும்
மறிகட
லோனயன் றேடத்தானும்
அறிவரு கயிலையோ னானைக்காவே. 10
|
10.
பொ-ரை: இறைவனைப் பற்றி எதுவுமே கூறாத
அறிவிலிகளாகிய சமணர்களும், புத்தர்களும் கூறும் உரைகளைக்
கொள்ள வேண்டா. மடங்கிவீசும் அலைகளையுடைய பாற்கடலில்
பள்ளி கொள்ளும் திருமாலும், பிரமனும் அறிவதற்கரியவரான கயிலை மலையில் வீற்றிருந்தருளும்
சிவபெருமானே, மருண்ட பார்வையுடைய
மான்கன்றைக் கையிலேந்தித் திருவாரூரிலும், திருமயேந்திரத்திலும்,
திருவானைக்காவிலும் வீற்றிருந்தருளுகின்றார்.
கு-ரை:
வெறிய மான் கரத்து ஆரூரர் - மருண்டு
நோக்குதலையுடைய மானை ஏந்திய கையையுடைய ஆரூரர். வெறிய
-குறிப்புப் பெயரெச்சம். ஆரூர் - என்பதற்குமேல் எட்டாவது பாட்டுக் குறிப்புக் காண்க.
மறி - மடக்கி வீசும் அலைகளையுடைய. கடலோன் - பாற்கடலில் துயில்வோனாகிய திருமால்.
அறிவு அரு -
அறிவதற்கரிய.
|