3980. |
அகலமார்தரைப்
புகலுநான் மறைக் |
|
கிகலியோர்கள்வாழ்
புகலிமாநகர்ப்
பகல்செய்வோனெதிர்ச் சகலசேகர
னகிலநா யகனே. 3 |
3.பொ-ரை:
விரிந்த இப்பூமியிலுள்ளவர்களால் சிறப்பித்துச்
சொல்லப்படுகின்ற நான்கு வேதங்களிலும் வல்லவர்கள் வாழ்கின்ற
திருப்புகலி என்னும் பெரிய நகரத்தில் வீற்றிருந்தருள்கின்றவரும்,
சூரியனுக்கு எதிரான கலையோடு கூடிய சந்திரனை முடியில்
அணிந்தவருமான சிவபெருமானே அகில உலகத்திற்கும் தலைவர்
ஆவார்.
கு-ரை:
அகலம் ஆர் - இடம் அகன்ற. தரை -
பூமியிலுள்ளாரால். புகலும் - சிறப்பித்துச் சொல்லப் பெறுகின்ற.
நான்மறைக்கு இகலியோர் - நான்கு வேதங்களிலும் வாதிட்டு
வென்றவர். பகல் செய்வோன் - சூரியனுக்கு. எதிர் - எதிராகிய.
சகலன் - கலையோடு கூடியவனாகிய சந்திரனை. சேகரன் - முடியில்
அணிந்த சிவபெருமான்.
|