3983. |
ஏந்தராவெதிர்
வாய்ந்தநுண்ணிடைப் |
|
பூந்தணோதியாள்
சேர்ந்தபங்கினன்
பூந்தராய்தொழு மாந்தர் மேனிமேற்
சேர்ந்திரா வினையே. 6 |
6.பொ-ரை:
படம் விரிக்கும் பாம்பிற்கு ஒப்பான நுண்ணிய
இடையை உடையவளாய்ப் பூ அணிந்த குளிர்ந்த கூந்தலையுடைய உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்ட
சிவபெருமான்
வீற்றிருந்தருளுகின்ற திருப்பூந்தராய் என்னும் திருத்தலத்தைப்
தொழும் மக்கள்மேல் பிணி முதலிய துன்பங்கள் உடம்பைப் பற்றி
நில்லாமல் விலகிவிடும்.
கு-ரை:
ஏந்து - படம் விரிக்கும். அரா எதிர் - பாம்பிற்கு
ஒப்பு. வாய்ந்த - பொருந்திய. நுண்ணிடை - சிற்றிடையையும். பூ -
பூவையணிந்த. தண் - குளிர்ந்த. ஓதியாள் - கூந்தலையும் உடைய
அம்பிகை. வினை - பிணி முதலிய துன்பங்கள். மேனிமேல்
சேர்ந்திரா - உடம்பைப்பற்றி நில்லா, விலகிவிடும் என்பது.
|