3984. |
சுரபுரத்தினைத்
துயர்செய்தாரகன் |
|
துஞ்சவெஞ்சினக்
காளியைத்தருஞ்
சிரபுரத்துளா னென்னவல்லவர்
சித்திபெற் றவரே. 7 |
7.பொ-ரை:
தேவருலகத்தைத் துன்புறுத்திய தாரகாசுரனைக்
கொல்லும்படி வெஞ்சினம் கொண்ட காளியை அம்பிகையின்
அம்சமாகத் தோற்றுவித்தருளிய திருச்சிரபுரத்தில் வீற்றிருந்தருளும்
சிவபெருமானைப் போற்றி வழிபடுபவர்கள் அட்டமாசித்திகள்
அனைத்தும் பெறுவர்.
கு-ரை:
சுரபுரத்தினை - தேவருலகை. துயர்செய் -
துன்புறுத்திய (தாரகன்) அசுரர்களுக்குப் பற்றுக் கோடாயிருந்த
மகிடாசுரன் ஒழியத் துர்க்கையை அம்பிகையின் அம்சத்தினின்றும்
தோற்றுவித்தருளிய, சிரபுரத்திலுள்ள சிவன் என்ன அட்டமா
சித்திகளும் கைகூடும். புரம் - இங்கு உலகு என்னும் பொருளில்
வந்தது.
|