3986. |
பண்புசேரிலங்
கைக்குநாதனன் |
|
முடிகள்பத்தையுங்
கெடநெரித்தவன்
சண்பையாதியைத் தொழுமவர்களைச்
சாதியா வினையே. 9 |
9.
பொ-ரை: பெருமைகள் பலவுடைய இலங்கைக்கு அரசனான இராவணன் முடிகள் பத்தையும்
நெரித்த, திருச்சண்பை என்னும்
திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற ஆதியாகிய சிவபெருமானைத்
தொழுபவர்கள் வினைகள் துன்புறுத்தா. வலியிழந்துபோம்.
கு-ரை:
பண்புசேர் இலங்கைக்கு நாதன் என்றது - எழில்
செய் கூகை (சிந்தாமணி.102) போலக் கொள்க. சாதியா -
துன்புறுத்தா.
|