3987. |
ஆழியங்கையிற்
கொண்டமாலய |
|
னறிவொணாததோர்
வடிவுகொண்டவன்
காழிமாநகர்க் கடவுணாமமே
கற்றல்நற் றவமே. 10 |
10.
பொ-ரை: சக்கரப்படையை அழகிய கையில் கொண்ட
திருமாலும், பிரமனும் அறிய வொண்ணாதபடி நெருப்புப் பிழம்பு
வடிவாய் நின்றவனும், சீகாழி என்னும் மாநகரில் வீற்றிருந்தருளுகின்ற கடவுளுமான சிவபெருமானின்
புகழ்களையே கற்றல் நல்ல தவமாகும்.
கு-ரை:
கடவுள் நாமமே கற்றல் நல்தவம் - கடவுளின்
புகழைக் கற்றலே நல்ல தவமாகும்.
|