| 
         
          | 3988. | விச்சையொன்றிலாச் 
            சமணர்சாக்கியப் |   
          |  | பிச்சர்தங்களைக் 
            கரிசறுத்தவன் கொச்சைமாநகர்க் கன்புசெய்பவர்
 குணங்கள் கூறுமினே.                 11
 |  
            11. 
        பொ-ரை: மெய்யுணர்வு தரும் கல்வியறிவு இல்லாத சமணர், புத்தர்களாகிய பித்தர்களின் குற்றங்களை நீக்கிய
 சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற திருக்கொச்சை மாநகரிடத்து
 அன்பு செய்பவர்களுடைய குணங்களை எடுத்துக் கூறுங்கள்.
       கு-ரை: 
        விச்சை யொன்று இலா - மெய்யுணர்வு வரும் கல்வியறிவு ஒரு சிறிதுமில்லாத. பிச்சர் பித்தர் என்பதன் போலி.
 கரிசு அறுத்தவன் - தீமையாகிய வேரையறுத்தவன், அன்பு
 செய்பவர் குணங்கள் கூறுமின்! நல்லார் குணங்களுரைப்பதுவும்
 நன்றே (மூதுரை.8.)
 |