3990. வேலினேர்தரு கண்ணினாளுமை
       பங்கனங்கணன் மிழலைமாநகர்
ஆலநீழலின் மேவினானடிக்
     கன்பர்துன் பிலரே.                    1

    1. பொ-ரை: வேல் போன்று கூர்மையும், ஒளியுமுடைய
கண்களை உடைய உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டவர்.
அழகிய கண்களையுடைய சிவபெருமான். அவர் திருவீழிமிழலை
என்னும் மாநகரில் வீற்றிருந்தருளுகின்றார். ஆலமரநிழல் கீழிருந்து
அறம்உரைத்தவர். அப்பெருமானின் திருவடிகளை அன்புடன்
வணங்குபவர்கட்குத் துன்பம் இல்லை.

     கு-ரை: வேலின் நேர்தரு - வேலை ஒத்த.நீங்கும்.