| 
         
          | 3991. | விளங்குநான்மறை 
            வல்லவேதியர் |   
          |  | மல்குசீர்வளர் 
            மிழலையானடி உளங்கொள்வார்தமை யுளங்கொள்வார்வினை
 யொல்லை யாசறுமே.                   2
 |  
           2. 
      பொ-ரை: நான்கு வேதங்களையும் நன்கு கற்றுவல்ல அந்தணர்கள் வசிக்கின்ற, புகழ்மிக்க திருவீழிமிழலையில்
 வீற்றிருந்தருளும் சிவபெருமானின் திருவடிகளை உள்ளத்தால்
 தியானிப்பவர்கள் சிவனடியார்கள், அவ்வடியார்களை வழிபடும்
 அன்பர்களின் வினையான குற்றம் விரைவில் நீங்கும்.
  
             கு-ரை: 
        நான் மறை வல்ல வேதியர் மல்குசீர் வளர்மிழலை என்பது தில்லை மூவாயிரம்; திருவீழிமிழலை ஐந்நூறு; என்னும்
 பழமொழிப்படி அந்தணர்கள் மிகுதியைக் குறித்ததாம். ஐந்நூற்று
 அந்தணர் ஏத்தும் எண்ணில் பல்கோடி குணத்தர் ஏர்வீழி, இவர்
 நம்மை ஆளுடையாரே (தி.9 திருவிசைப்பா.54) என்று சேந்தனார்
 கூறுவதுங் கொள்க. வினை ஆசு அறும் - வினை பற்று அற நீங்கும்.
 |