| 
         
          | 3992. | விசையினோடெழு 
            பசையுநஞ்சினை |   
          |  | யசைவுசெய்தவன் 
            மிழலைமாநகர் இசையுமீசனை நசையின்மேவினான்
 மிசைசெயா வினையே.                 3
 |  
             3. 
        பொ-ரை: வேகமாகப் பரவும் கொல்லும் தன்மையுடைய விடத்தை உண்டு சிவபெருமான் திருவீழிமிழலை என்னும்
 திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றான். நஞ்சுண்டும் சாவாது
 புகழுடன் விளங்கும் அப்பெருமானை நாடி வணங்கினால்
 வினையானது துன்பம் செய்யாது.
       கு-ரை: 
        விசையினொடு எழு - வேகமாகப் பரவிய. பசையும் நஞ்சினை - பற்றிக் கொல்லும் விடத்தை. அசைவு செய்தவன் -
 உண்டவன். நசையின் மேவினால் - விருப்பத்தோடு அடைந்தால்.
 மிசை - மிகை; தீங்கு.
 |