3993. வென்றிசேர்கொடி மூடுமாமதிண்
       மிழலைமாநகர் மேவிநாடொறும்
நின்றவாதிதன் னடிநினைப்பவர்
     துன்பமொன் றிலரே.                  4

     4. பொ-ரை: சிவபெருமானின் வெற்றிக்கொடிகள் வானத்தை
மூடும்படி விளங்கும், உயர்ந்த மதில்களையுடையது திருவீழி மிழிலை
என்னும் மாநகர். அப்பெருமாநகரினைவிரும்பி ஆங்கு
வீற்றிருந்தருளும் சிவபெருமானின் திருவடிகளை நாள் தோறும்
நினைத்து வழிபடுபவர்கட்குத் துன்பம் சிறிதும் இல்லை.

     கு-ரை: வென்றிசேர் கொடி - வெற்றியினால் எடுத்த
கொடிகள். மூடும் - வானை மூடுகின்ற. மாமதில் - உயர்ந்த
மதிலையுடைய. நாடொறும் நின்ற - என்றும் நிலைபெற்று நின்ற.
ஒன்று - ஒரு சிறிதும்.