| 3994. |
போதகந்தனை
யுரிசெய்தோன்புய |
| |
னேர்வரும்பொழின்
மிழலைமாநகர்
ஆதரஞ்செய்த வடிகள்பாதம்
அலாலொர்பற் றிலமே.
5 |
5.
பொ-ரை: செருக்குடன் முனிவர்களால் கொடு
வேள்வியினின்றும் அனுப்பப்பட்ட மதங்கொண்ட யானையின்
தோலை உரித்த சிவபெருமான், மேகம்படியும் சோலைகளையுடைய
திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில் விரும்பி
வீற்றிருந்தருளுகின்றார். அப்பெருமானின் திருவடிகளைத்தவிர
வேறு பற்று எதுவும் எமக்கு இல்லை.
கு-ரை:
போதகம் - யானை. புயல் நேர் வரும் - மேகங்கள்
படியும். ஆதரம் செய்த அடிகள் - விரும்பித் தங்கிய
சிவபெருமான்.
|