| 
         
          | 3995. | தக்கன்வேள்வியைச் 
            சாடினார்மணி |   
          |  | தொக்கமாளிகை 
            மிழலைமேவிய நக்கனாரடி தொழுவர் மேல்வினை
 நாடொறுங் கெடுமே.                  6
 |        6. 
        பொ-ரை: சிவபெருமான், தக்கன் வேள்வியைத் தகர்த்தவர். இரத்தினங்கள் பதிக்கப்பெற்ற மாளிகைகளையுடைய திருவீழிமிழலை
 என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் திகம்பரரான
 சிவபெருமானின் திருவடிகளை நாள்தோறும் தொழுபவர்கட்கு
 மேல்வினை உண்டாகாது.
       கு-ரை: 
        சாடினார் - மோதி அழித்தார். மணி தொக்க மாளிகை - இரத்தினங்கள் பதிக்கப் பெற்ற மாளிகை. நக்கனார் -
 ஆடையில்லாதவர், தொழுவார்மேல் - தொழுவார்கள் இடத்து.
 |