3996.. |
போரணாவுமுப்
புரமெரித்தவன் |
|
பொழில்கள்சூழ்தரு
மிழலைமாநகர்ச்
சேருமீசனைச் சிந்தைசெய்பவர்
தீவினை கெடுமே. 7 |
7.
பொ-ரை: போர்க்குணத்தை விரும்பி அதனை மேற்
கொண்ட அசுரர்களின் முப்புரங்களை எரித்த சிவபெருமான்,
சோலைகள் சூழ்ந்த திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில்
வீற்றிருந்தருளுகின்றார். அப்பெருமானைச் சிந்தித்து வழிபடும்
அடியவர்களின் தீவினை அழிந்துவிடும்.
கு-ரை:
போர் அணாவு - போரை மேற்கொண்ட.
|