| 
         
          | 4001. | பரசுபாணியர் 
            பாடல்வீணையர் |   
          |  | பட்டினத்துறை 
            பல்லவனீச்சரத் தரசுபேணி நின்றார்
 இவர்தன்மை யறிவாரார்.                1
 |   
             1. 
        பொ-ரை: சிவபெருமான் மழுப்படையைக் கையில் ஏந்தியவர். வீணையில் பாட்டிசைப்பவர். காவிரிப்பூம்பட்டினத்துப்
 பல்லவனீச்சரத்தில் ஆட்சி புரிந்து அருள்புரிபவர். இவரது தன்மை
 எத்தகையது என்பதை யார் அறிவார்? ஒருவரும் அறியார்.
       கு-ரை: 
        பரசு பாணியர் - பரசு என்னும் ஆயுதத்தைக் கையில் ஏந்தியவர். பாடல் வீணையர் - பாடுதலுக்குரிய கருவியாகிய
 வீணையை உடையவர் என்றது ஒன்றோடொன்று மாறுபட்ட
 தன்மையை உடையவர். ஆகையினால் இவர் தன்மை அறிவார் யார்
 என்றார்.
 |