4002. பட்டநெற்றியர் நட்டமாடுவர்
       பட்டினத்துறை பல்லவனீச்சரத்
திட்டமா யிருப்பார்
     இவர்தன்மை யறிவாரார்.               2

     2. பொ-ரை: தலைமைப் பட்டத்திற்குரிய அடையாள
அணிகலன் அணிந்த நெற்றியர். திருநடனம் செய்பவர்.
காவிரிப்பூம்பட்டினத்துப் பல்லவனீச்சரத்தில் விரும்பி
வீற்றிருந்தருளுபவர். இவரது தன்மை எத்தன்மையது என்பதை
யாவரே அறிவார்?

     கு-ரை: பட்டம் வீரர் நெற்றியில் அணியும் ஓர் அணிகலன்.
அது இராமாயணத்தில் “நுதலணி ஓடையில் பிறங்கும் வீரபட்டிகை”
என வருவதால் அறிக. நட்டம் - திருக்கூத்து.