| 
         
          | 4003. | பவளமேனியர் 
            திகழுநீற்றினர் |   
          |  | பட்டினத்துறை 
            பல்லவனீச்சரத் தழகரா யிருப்பார்
 இவர்தன்மை யறிவாரார்.               3
 |  
            3. 
        பொ-ரை: சிவபெருமான் பவளம் போன்ற சிவந்த மேனியுடையவர், ஒளிபொருந்திய திருவெண்ணீற்றினை
 அணிந்துள்ளவர். காவிரிப் பூம்பட்டினத்துப் பல்லவனீச்சரத்தில்
 விரும்பி வீற்றிருந்தருளும் அழகர். இவரது தன்மை எத்தன்மையது
 என்பதை யாவரே அறிவார்?
       கு-ரை: 
        பவளமேனியர் - செந்நிறம் பொருந்திய உடம்பை உடையவர். வெள்ளிப் பொடி பவளப் புறம் பூசிய வேதியனே
 (தி.4.ப.112. பா.1.); பவளமே மகுடம், பவளமே திருவாய், பவளமே
 திருவுடம்பு (தி.9 திருவிசைப்பா.95.); பவளம்போல் மேனியில் பால்
 வெண்ணீறு (தி.4. ப.81. பா.4.) என்பன காண்க.
 |