| 
         
          | 4004. | பண்ணில்யாழினர் 
            பயிலுமொந்தையர் |   
          |  | பட்டினத்துறை 
            பல்லவனீச்சரத் தண்ணலா யிருப்பார்
 இவர்தன்மை யறிவாரார்.               4
 |       4. 
        பொ-ரை: இறைவன் பண்ணிசைக்கும் யாழினை உடையவர். மொந்தை என்னும் வாத்தியத்தை வாசிப்பவர். காவிரிப்பூம்
 பட்டினத்துப் பல்லவனீச்சரத்தில் விரும்பி வீற்றிருந்தருளும் தலைவர்.
 இவரது தன்மை எத்தகையது என்பதை யார் அறிவார்?
       கு-ரை: 
        பண்ணில் யாழினர் - பண்ணோடு கூடிய யாழை உடையவர். ஏழன் உருபு, மூன்றின் பொருளில் வந்ததால் வேற்றுமை
 மயக்கம். மொந்தை - ஒருவகை வாத்தியம்.
 |