| 
         
          | 4005. | பல்லிலோட்டினர் 
            பலிகொண்டுண்பவர் |   
          |  | பட்டினத்துறை 
            பல்லவனீச்சரத் தெல்லியாட் டுகந்தார்
 இவர்தன்மை யறிவாரார்.                5
 |  
             5. 
        பொ-ரை: சிவபெருமான் பற்களே இல்லாத மண்டையோட்டில் பிச்சையேற்று உண்பவர். காவிரிப்பூம்பட்டினத்துப்
 பல்லவனீச்சரத்தில் விரும்பி வீற்றிருந்தருள்பவர். இரவில் நடனம்
 ஆடுதலை விரும்புபவர். இவர் தன்மை யார் அறிவார்?
       கு-ரை: 
        பல்லில் ஓட்டினர் - பல் இல்லாத மண்டை ஓட்டைப் பிச்சைப் பாத்திரமாக உடையவர். எல்லி ஆட்டு உகந்தார் - இரவில்
 ஆடுதலில் விருப்பம் உடையவர். ஆட்டு - முதனிலை திரிந்த
 தொழிற் பெயர்.
 |