4007. |
பைங்கணேற்றினர்
திங்கள்சூடுவர் |
|
பட்டினத்துறை
பல்லவனீச்சரத்
தெங்குமா யிருப்பார்
இவர்தன்மை யறிவாரார். 7 |
7.
பொ-ரை: இறைவன் பசிய கண்களையுடைய எருதின்மேல்
ஏறுபவர். பிறைச்சந்திரனை சூடியுள்ளவர். காவிரிப்பூம்பட்டினத்துப்
பல்லவனீச்சரத்தில் விரும்பி வீற்றிருந்தருளினாலும், எங்கும்
வியாபித்துள்ளவர். இவர் தன்மை யார் அறிவார்?
கு-ரை:
எங்குமாய்ப் பல்லவனீச்சரத்து இருப்பார் என்றது:-
அகண்டிதன் ஆகி எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருள்
அடியாரை ஆட்கொள்வான் வேண்டி, குருலிங்கசங்கமங்களில்
கண்டனாய்த் தோன்றும் தன்மை விளக்கியவாறு. கண்டன் சிறு
அளவில் காணப்படுபவன். கண்டனைக் கண்டிராதே காலத்தைக்
கழித்தவாறே என்ற திருநேரிசையால் அறிக.
|