| 
         
          | 4009. | படிகொண்மேனியர் 
            கடிகொள்கொன்றையர் |   
          |  | பட்டினத்துறை 
            பல்லவனீச்சரத் தடிகளா யிருப்பார்
 இவர்தன்மை யறிவாரார்.               9
 |  
            9. 
      பொ-ரை: இறைவன் உலகம் முழுவதையும் தம் திரு மேனியாகக் 
      கொண்டவர். நறுமணம் கமழும் கொன்றை மாலையை அணிந்துள்ளவன். காவிரிப்பூம்பட்டினத்துப் பல்லவனீச்சரத்தில்
 தலைவனாய் விரும்பி வீற்றிருந்தருளுபவன். இவன் தன்மை யார்
 அறிவார்?
       கு-ரை: 
        படிகொள் - பல்வேறு வடிவங்களில் திருவுடம்பு கொள்பவர். கடி - வாசனை.
 |