4011. வானமாள்வதற் கூனமொனறிலை
       மாதர்பல்லவ னீச்சரத்தானை
ஞானசம்பந்தன் நற்றமிழ்
     சொல்லவல்லவர் நல்லவரே.            11

     11. பொ-ரை: அழகிய காவிரிப்பூம்பட்டினப் பல்லவனீச்சரத்து
இறைவனைப் போற்றி, ஞானசம்பந்தன் அருளிய இந்நற்றமிழ்த் திருப்
பதிகத்தை ஓத வல்லவர்கள் நற்குணங்கள் வாய்க்கப் பெறுவர்.
அவர்கள் மறுமையில் வானுலகை ஆள்வதற்குத்
தடையொன்றுமில்லை.

     கு-ரை: ஊனம் - தடை. மாதர் - அழகிய.