4025. சடையணிந்ததும் வெண்டலை மாலையே
       தம்முடம்பிலும் வெண்டலை மாலையே
படையிலங்கையிற் சூலம தென்பதே
     பரந்திலங்கையிற் சூலம தென்பதே
புடைபரப்பன பூதக ணங்களே
     போற்றிசைப்பன பூகத ணங்களே
கடைகடோறு மிரப்பது மிச்சையே
     கம்பமேவி யிருப்பது மிச்சையே.         2

     2. பொ-ரை: சிவபெருமான் சடையில் அணிந்திருப்பது
வெண்டலை மாலை ஆகும். உடம்பிலும் தலைமாலை அணிந்துள்ளார்.
அழகிய கையில் சூலப்படை ஏந்தி உள்ளவர். பரந்து விளங்கும்
கையைப் படை போன்று கொண்டு தோண்டிய அழகு செய்வதாகிய
அணிகலன் திருமானின் கண் ஆகும். பக்கத்தில் சூழ்ந்து
விளங்குவனவும், போற்றிசைப்பனவும் பூதகணங்களே. அப்பெருமான்
வாயில்கள் தோறும் சென்று இரப்பது உணவே. அவர்
திருக்கச்சியேகம்பம் என்னும் திருத்தலத்தில் விரும்பி
வீற்றிருந்தருளுகின்றார்.

     கு-ரை: சடையணிந்தது வெண்டலையாகிய மாலை - (நகு