4033. |
ஓருடம்பினை
யீருரு வாகவே |
|
யுன்பொருட்டிற
மீருரு வாகவே
ஆருமெய்தற் கரிது பெரிதுமே
யாற்றவெய்தற் கரிது பெரிதுமே
தேரரும்மறி
யாது திகைப்பரே
சித்தமும்மறி யாது திகைப்பரே
கார்நிறத்தம ணர்க்கொரு கம்பமே
கடவுணீயிடங் கொண்டது கம்பமே. 10
|
10.
பொ-ரை: இறைவரே! யானையின் உடம்பினை
உரித்ததாகிய தோலை உடம்பில் போர்வையாக அணிந்துள்ளீர்.
உம்முடைய உண்மைத்தன்மை சக்தி, சிவம் என இரண்டு திறந்தது.
உமது பாகத்திலுள்ள அம்பிகையின் கரிய நிறம் ஒளிவாய்ந்தது.
உயிர்கள் ஆன்ம முயற்சியினால் உம் திருவடிகளை அடைதல்
அரிது. புத்தர் களும் உம்மை அறியாது திகைப்பர். அவர்கள்
அறிவும் தம் நிலைமை மாறமாட்டாதாதலால் உம்மைத் துதிப்பதை
வெறுப்பர். கருநிறமுடைய சமணர்கள் உம்மைக் கண்டு நடுங்குவர்.
பரம்பொருளாகிய நீர் விரும்பி வீற்றிருந்தருளுவது
திருக்கச்சியேகம்பமே.
கு-ரை:
ஓர் உடம்பினை - யானையின் ஓர் உடம்பை. ஈர் -
உரித்ததாகிய தோல். உரு ஆக - உடம்பில் (போர்வை) ஆகவும்.
ஈர் - ஈர்தல், முதனிலைத் தொழிற்பெயர் இங்கு ஆகுபெயர். உன்
பொருள் திறம் - உம்முடைய உண்மைத் தன்மை. ஈர் உரு ஆக -
சத்தி சிவம் என்னும் இரண்டு திறத்தது ஆகவும். ஆரும் - உமது
உடம்பில் கலந்த, மெய்தன் - அம்பிகையின் திருவுடம்பின். கரிது -
கரிய நிறம். பெரிது - மிகவும் ஒளிவாய்ந்தது. ஆற்றல் - ஆன்ம
முயற்சியினால், எய்தற்குப் பெரிதும் அரிது - உம்முடைய திருவடி
முற்றிலும் அடைய முடியாதது. தேரரும் - புத்தரும். சித்தமும் -
அவர் அறிவுகளும். மறியா - தம் நிலைமை மாறமாட்டா. துதி
கைப்பர் - ஆதலால் உம்மைத் துதித்தலை வெறுப்பர். ஒரு கம்பமே
- உம்மை நினைத்தாலே ஒரு பெரிய நடுக்கம். மழைத்துளி போல
வந்தீண்டலால் அறிவுகள் எனப்பட்டது.
|