4038. |
பண்டயன்றலை
யொன்று மறுத்தியே |
|
பாதமோதினர்
பாவ மறுத்தியே
துண்டவெண்பிறை சென்னி யிருத்தியே
தூயவெள்ளெரு தேறியி ருத்தியே
கண்டுகாமனை
வேவ விழித்தியே
காதலில்லவர் தம்மை யிழித்தியே
அண்டநாயக னேமிகு கண்டனே
யாலவாயினின் மேவிய கண்டனே. 4
|
4.
பொ-ரை: முற்காலத்தில் நீர் பிரமனின் தலை ஒன்றை
அறுத்தீர்.உம் திருவடிகளை வணங்கும் அன்பர்களின் பாவங்களை
அறுப்பீர். பிறைச்சந்திரனைச் சடையில் அணிந்துள்ளீர். தூய
வெண்ணிற இடபத்தின் மீது இருப்பீர். மன்மதன் சாம்பலாகுமாறு
நெற்றிக்கண்ணால் விழித்தீர். அன்பில்லாதவரை இகழ்வீர். தேவர்
கு-ரை:
அறுத்தி - அறுத்தாய். பாதம் ஓதினர் பாவம்மறுத்தி -
பாதத்தைத் துதிப்பவர்களுக்கு பாவம் உண்டு என்பாரை மறுத்து
இல்லை என்று கூறுவாய். இருத்தி - இருக்கச்செய்தவன். ஏறிஇருத்தி
-ஏறிஇருப்பாய். இருத்தி - முதலது வினையால் அணையும் பெயர்.
மற்றது வினைமுற்று. விழித்தி - விழித்துப்பார்த்தாய். காதல் இல்லவர்
தம்மை - அன்பு இல்லாதவர்கள். இழித்தி - கீழ்ப்படச்செய்வாய்.
அண்டநாயகனே - தேவர்களுக்குத் தலைவனே. அண்டர் நாயகன்
சிலவிகாரமாம் உயர்திணை என்பது விதி. மிகுகண்டனே -
குற்றங்களை நீக்குபவன் என்பதில் பண்புப் பெயர் விகுதியாகிய
ஐகாரம் கெட்டது. (பிழையெல்லாம் தவிரப்பணிப்பானை என்றதன்
கருத்து.) மேவிய + அகண்டன் - எழுந்தருளியுள்ள அளவிட
முடியாதவன். மேவிய என்னும் பெயரெச்சத்து விகுதி விகாரத்தால்
தொக்கது. தொட்டனைத்தூறும் மணற்கேணி - என்ற திருக்குறளிற்
போல.
|