4039. |
சென்றுதாதை
யுகுத்தனன் பாலையே |
|
சீறியன்பு
செகுத்தனன் பாலையே
வென்றிசேர்மழுக் கொண்டுமுன் காலையே
வீழவெட்டிடக் கண்டுமுன் காலையே
நின்றமாணியை யோடின கங்கையால்
நிலவமல்கி யுதித்தன கங்கையால்
அன்றுநின்னுரு வாகத் தடவியே
யாலவாயர னாகத் தடவியே. 5 |
5.
பொ-ரை: தந்தையாகிய எச்சதத்தன் சிவபூசைக்குரிய
பாலைக் கவிழ்த்துவிட, புதல்வராகிய விசாரசருமர் சினந்து
அருகிலுள்ள கோலை எடுத்து ஓச்ச அது மழுவாக மாறித் தந்தையின் முன்காலை வெட்டிற்று.
ஆங்குச் சிவபூசை ஆற்றிய பிரமசாரியான
அவ்விசார சருமருக்குக் கங்கை முதலானவற்றை அணிந்த
திருக்கோலத்தோடு தோன்றிக் காட்சி நல்கியவர் சிவபெருமான்.
அப்பெருமான், தந்தையாகிய எச்சதத்தனை வீழ்த்திய அடியவரின்
பாவத்தைப் போக்கித் தம் திருக்கையால் வருடிச் சிவசாரூபம்
பெறத்தடவிச் சண்டீச பதம் தந்து அருளினர். அப்பெருமான்
திருஆலவாயில் வீற்றிருந்தருளும் அரன் ஆவார்.
கு-ரை:
முன்காலை - முற்காலத்தில். நன்பாலை -
அபிடேகத்திற்கு வைத்த நல்லபாலை. தாதை - தந்தையாகிய
எச்சதத்தன், சென்று - போய். சீறி - சினந்து. உகுத்தனன் -
கவிழ்த்து. அன்பு - அன்போடு செய்யும் பூசையை. செகுத்தனன்பால்
(ஐ) - அழித்த அவனிடத்தில். மழுக்கொண்டு - கிடந்த கோலை
மழுவாகக் கொண்டு. முன்காலை
- முன்கால்களை. வீட
-துண்டித்துவிழ. வெட்டிட - வெட்ட. நின்றமாணியை -
அங்கேயிருந்த பிரமசாரியாகிய அவ்விசாரசருமரை. கண்டு - பார்த்து.
ஓடினகங்கையால் - பரந்த கங்கைநதி முதலியவற்றை
அணிந்தகோலத்தோடு. உதித்து - இடப வாகனத்தின்மேல்
வெளிப்பட்டருளி. அனகம் - அவர்செய்த பாதகம் புண்ணியமான
தன்மையினாலே. அன்று
- அன்றைக்கு. நின்னுருவாகத் தடவி -
மானிட உருவம்மாறி நினது வடிவமாகக் கையால் தடவினவனே!
ஆலவாய் அரன் - ஆலவாயில் எழுந்தருளிய சிவபெருமானே.
அகத்தது - உமது உடம்பில் அணிவதாகிய ஆடை, மாலை
முதலியவற்றையும். அடு - உமக் கென்று சமைத்த. அவி - உணவையும் அல்லவா? அன்று நீர்
அருளியது. உகுத்தனிடன் -
முற்றெச்சம். அன்பு - பூசைக்கு, ஆகு பெயர். ஓடின கங்கையால் -
ஆல், ஒடுப்பொருளில் வந்தது. சிவபெருமான்
வந்த கோலம்
செறிந்தசடை நீண்முடியாரும் தேவியோடும் விடையேறி எனவும்,
தடவினமை மடுத்த கருணையால் உச்சிமோந்து மகிழ்ந்தருள
எனவும், (நின்னுருவாக) உருமாறினமை செங்கண்விடையார் திரு
மலர்க்கை தீண்டப்பெற்ற சிறுவனார், அங்கண்மாயை யாக்கையின்
மேலளவின்றுயர்ந்த சிவமயமாய் எனவும், ஆகத்தது அடு அவியும்
அருளியது - நாம் உண்டகலமும், உடுப்பனவும் அருளிச்
செய்கின்றார். ஆகத்தது - ஆகத்து என விகாரமுற்றது. அருளியது
என்பது அவாய் நிலையான் வந்தது. எல்லாம் மழை என்ற
திருக்குறளிற்போல.
|