4050. |
ஓவி
லாதிடுங் கரணமே |
|
யுன்னு
மென்னுடைக் கரணமே
ஏவு சேர்வுநின் னாணையே
யருளி னின்னபொற் றாணையே
பாவி
யாதுரை மெய்யிலே
பயின்ற நின்னடி மெய்யிலே
மேவி னான்விறற் கண்ணனே
மிழலை மேயமுக் கண்ணனே. 5
|
5.
பொ-ரை: மிழலையை உகந்தருளியிருக்கும் முக்கண்
இறைவரே படைப்புக் காலமுதல் மகாசங்கார காலம் வரை
ஓய்வின்றித் தொழிலாற்றும் கரணபூதர். மனம் முதலிய அகக்கருவிகள் உம்மையே நினைக்கும்.
மன்மதபாணம் என்மேல் தைப்பதும் உம்
ஆணையால், உம் பொன்போன்ற திருவடிகளை நீர் அருளினால்
துன்பம் எனக்கு நேருமோ? உம்மைக் கருதாது உரைப்பன
மெய்ம்மையாகாது. வலியோனாகிய திருமால் உம்முடைய திருவடியை
உண்மையாகவே பொருந்தப் பெற்றான்.
கு-ரை:
ஓவிலாது - (மகாசங்கார காலம் வரையும்) ஓயாமல்,
இடும் (சக்தியைச் செலுத்தி ஐந்தொழிலையும்) நடத்தும். கரணம் -
சிறந்த கரண பூதராய் இருப்பவரே யாது சிறந்த காரணம் அது
கரணம் என்பது தருக்க நூல். கரணம் - (என்னுடைய) மனமுதலிய
அகக்கருவிகள். உன்னும் - உம்மையே நினைக்கும். ஏவு -
மன்மதபாணம். சேர்வும் - என்மேல் தைப்பதும், நின்ஆணையே -
உமது ஆணையின்படிதானோ? நின்ன - உம்முடைய. பொற்றாள் -
பொன்போன்ற திருவடிகளை. அருளின் - அருளினால். நை(தல்)ஏ -
துன்புறுதல் எனக்கு நேருமா? நை - நைதல். ஏ - வினாப் பொருட்டு. இதுவும் தலைவி கூற்று.
பாவியது - (உம்மை மனத்துக்) கருதாது.
உரை - உரைப்பன. மெய்இல் - உண்மையில்லாதனவே. இல் - பகுதியே நின்று வினைமுற்றுப்
பொருளையுணர்த்திற்று, பெறுவது
கொள்வாரும் கள்வரும் நேர் (குறள் 814) என்றதிற் போல. விறல்
- வலியோனாகிய, கண்ணன் - திருமால். உன்அடி -
உமதுதிருவடியை. மெய்யிலே - உண்மையாகவே. மேவினான் -
பொருந்தப் பெற்றான்.
|