4051. |
வாய்ந்த
மேனியெரி வண்ணமே |
|
மகிழ்ந்து
பாடுவது வண்ணமே
காய்ந்து வீழ்ந்தவன் காலனே
கடுநடஞ் செயுங் காலனே
போந்த தெம்மிடை யிரவிலே
யும்மிடைக் கள்வ மிரவிலே
வேய்ந்ததும் மிழலை யென்பதே
விரும்பியே யணிவ தென்பதே. 6 |
6.
பொ-ரை: சிவபெருமானின் திருமேனி நெருப்புப் போன்று
சிவந்த வண்ணமுடையது. அவர் மகிழ்ந்து பாடுவது பல வண்ணப் பாடல்களையே. அவரால் உதைக்கப்
பட்டு வீழ்ந்தவன் காலன்.
அவர் அழகிய திருநடனம் செய்யும் கால்களை உடையவர். அவர்
எங்கள் வீட்டிற்குப் பிச்சை யேற்க வந்தது இரவில். எம் உள்ளம்
புகுந்து கவர்ந்தது இரவில். அப்பெருமான் வீற்றிருந்தருளுவது
திருவீழிமிழலை என்னும் திருத்தலமாகும். அவர் விரும்பி அணிவது
எலும்பு மாலையே.
கு-ரை:
மேனி, எரிவண்ணம் - தீயின் வண்ணம். பாடுவது -
தேவரீர் பாடுவதும். வண்ணம் - பலவண்ணப் பாடல்களையே.
வண்ணம் சந்தம் இவை தாளத்தோடு பாடற்குரிய இயலிசைப்
பாடல்கள். காலன் - யமன், கால்களையுடையவன். எம்மிடைப்
போந்தது - எங்கள் வீட்டிற்கு வந்தது இரவில் - பிச்சை யேற்றலை
முன்னிட்டு, உம்மிடை - உம்மொடு. இரவில் - இராக்காலத்தில்.
கள்வம் - கள்ளத்தனமாகப்புணர்வோம். இடை - உருபு மயக்கம்.
(அணிவது) என்பு. (அது) எலும்பு - தலைவிகூற்று.
|