4054. |
காய
மிக்கதொரு பன்றியே |
|
கலந்த
நின்னவுரு பன்றியே
ஏய விப்புவி மயங்கவே
யிருவர் தாமன மயங்கவே
தூய மெய்த்திர ளகண்டனே
தோன்றி நின்றமணி கண்டனே
மேய வித்துயில் விலக்கணா
மிழலை மேவிய விலக்கணா. 9 |
9.
பொ-ரை: பன்றி உருவெடுத்த திருமால், பிரமன் ஆகிய
இருவரும் சேர்ந்து தேடவும்,உம் உருவத் திருமேனியைக்
காண்பதற்கு இயலாதவராய், இப்புவியில் மயங்கி நின்று, மனம்
கலங்கிய நிலையில், தூய சோதித் திரளாய் அகண்ட திரு
மேனியராய்த் தோன்றி நின்ற நீலகண்டத்தை உடையவரே. எம்
தலைவரே! அடியேனின் தூக்கம் பிடிக்கா நிலையை விலக்குவீராக!
திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் அழகரே.
கு-ரை:
காயம் மிக்கது ஒரு பன்றி - பெரிய உடம்பையுடைய
திருமாலாகிய பன்றியும். இருவர் - பிரமனுமாகிய இருவரும். இப்புவி
- இப்பூமியில். மயங்க - சேர. நின்ன உருபு அன்றி - உமது
அடிமுடிகளின் உருவம் தங்களாற் காணப்படுவ தொன்று
அல்லாமையினால், மனம் மயங்க - மனம் கலங்க. மெய்த்திரள் -
உடம்பாகிய அக்கினிப் பிழம்பு. அகண்டனே - அளவிடப்
படாதவனாகி. தோன்றி நின்ற மணிகண்டனே - அவர்கட்கு
முன் வெளிப்படுகின்ற நீல கண்டத்தையுடையவரே. மே - நான்
இப்போது உற்ற, இத்துயில் - இப்பொய்த் தூக்கத்தை. தூக்கம்
பிடியாத.அண்ணா - தலைவனே. விலக்கு - நீக்குவீராக. இலக்கணா
- அழகனே, லட்சணம் என்பது வடசொல். அண்ணா - தலைவனே
என்ற பொருளில் அண்ணா நின்னையல்லால் இனியாரை
நினைக்கேனே (தி.7.ப.24.பா.5.) எனப் பயின்று வருவது காண்க.
|