4066.

வேரியுமேணவ காழியொயே யேனைநிணேமட                               ளோகரதே
  தேரகளோடம ணேநினையே யேயொழிகாவண                                மயுரிவே.  10

     10. பொ-ரை: நறுமணமும், தெய்விக மணமும், பெருமையும்,
புதுமையும் கலந்து விளங்கும் சீகாழி என்னும் திருத்தலத்தில்
வீற்றிருந்தருளுபவனே! துன்பங்களை நீக்கி அருள்பவனே. பேரருள்
உடையவனே. அதனை அள்ளிக்கொள்ளல் அகத்தவத்தாராகிய
சிவயோகிகளின் செய்கையே. புத்தர், சமணர்களின் மொழிகளை
எண்ணுதலையும், நண்ணுதலையும் ஒழித்தருள்வாயாக! இப்புறச்
சமயத்தார் பன்னெறிகளில் புகாமல் காத்தருளும் திறம் நின்
திருவடிக்கே உரியதாகும்.

     கு-ரை: வேரி - மணம். ஏண் - பெருமை. நவம் - புதுமை.
காழியாயே:- ஏனை - துன்பத்தையும். நீள்நேம் - மிக்க அன்பையும்.
அடு - முறையே ஒழி(த்தலும்) அள் - அள்ளிக்கொள்ளுதலுமாகிய
செய்கை. ஓகரது ஏ - யோகிகளுடைய செய்கையே. தேரகளோடு -
தேரர்களின் உபதேசங்களோடு. அமணே - அமணர்களின்
உபதேசங்களையும். நினை - நினைத்தலையும். ஏய் - அவரோடு
பொருந்துதலையும். ஒழி - ஒழிப்பீராக. காவணமே - அந்நெறிகளிற்
சேராமற்காக்கும் திறம். உரிவே - உமக்கு உரியவேயாகும். உரிவே -
உரியவே என்பதன் மரூஉ.