4074. |
அலைபுனற்
கங்கை தங்கிய சடையா |
|
ரடனெடு
மதிலொரு மூன்று
கொலையிடைச் செந்தீ வெந்தறக் கண்ட
குழகனார் கோயில தென்பர்
மலையின்மிக் குயர்ந்த மரக்கலஞ் சரக்கு
மற்றுமற் றிடையிடை யெங்குங்
கலைகளித் தேறிக் கானலில் வாழுங்
கழுமல நகரென லாமே. 7 |
7.
பொ-ரை: அலைகளோடு கூடிய கங்கையைத் தாங்கிய
சடையை உடையவர் சிவபெருமான்.நீண்ட மூன்று மதில்களும்
கொலை நிகழ்வதாகிய போரினிடையே செந்தீயினால் வெந்தழியும்
படி செய்தவர், இளமையும், அழகுடைய சிவபெருமான் ஆவார்.
வீற்றிருந்தருளும் கோயிலையுடைய திருத்தலமாவது, மலைகளை விட
மிக்குயர்ந்த சரக்கு மரக்கலங்கள் கடற்கரையில் நிற்க, கடற்கரைச்
சோலைகளில் மான்கள் மகிழ்ந்து ஓடி வாழ்தலுடைய திருக்கழுமல
நகர் எனக் கூறலாம்.
கு-ரை:
கண்ட - செய்த. சிறப்புவினை
பொதுவினைக்காயிற்று.
|