4075. |
ஒருக்கமுன்
னினையாத் தக்கன்றன் வேள்வி |
|
யுடைதர
வுழறிய படையார்
அரக்கனை வரையா லாற்றலன் றழித்த
வழகனா ரமர்ந்துறை கோயில்
பரக்கும்வண் புகழார் பழியவை பார்த்துப்
பலபல வறங்களே பயிற்றிக்
கரக்குமா றறியா வண்மையார் வாழுங்
கழுமல நகரென லாமே. 8 |
8.
பொ-ரை: இறைவனை நினையாது முற்காலத்தில் தக்கன்
செய்த யாகமாவது ஒருங்கே அழியும்படி கலக்கிய பூதப்படைகளை
உடையவரும், அரக்கனான இராவணனது ஆற்றலை மலையைச்
சற்றே கால்விரலால் ஊன்றி நெருக்குதலால் அழித்த அழகருமான சிவபெருமான் விரும்பி
வீற்றிருந்தருளும் கோயிலுள்ள திருத்
தலமாவது பரவுதலையுடைய மெய்ம்மையான புகழையுடையவரும்,
குற்றங்கள் வாராவண்ணம் நன்கு ஆராய்ந்து ஒல்லும் வகையான்
ஓவாது அறம்புரியும் மிக்க பயிற்சியுடையாரும், கனவிலும் கரக்கும்
எண்ணம் இல்லாத வள்ளன்மையுடையாரும் ஆகிய செந்நெறிச்
செல்வர்கள் வாழும் கழுமலநகரெனக் கூறலாம்.
கு-ரை:
உழறிய - உழற்றிய; கலங்கச் செய்த. இசைநோக்கி
உழறிய என்று ஆயிற்று. பயிற்றி - மிகச்செய்து.
|