4077. உரிந்துய ருருவி லுடைதவிர்ந் தாரு
 

     மத்துகில் போர்த்துழல் வாருந்
தெரிந்துபுன் மொழிகள் செப்பின கேளாச்
     செம்மையார் நன்மையா லுறைவாங்
குருந்துயர் கோங்கு கொடிவிடு முல்லை
     மல்லிகை சண்பகம் வேங்கை
கருத்தடங் கண்ணின் மங்கைமார் கொய்யுங்
     கழுமல நகரென லாமே.               10

     10. பொ-ரை: உயர்ந்த தமது உடலின்றும் உடையினை நீக்கிய
சமணர்களும், மிக்க ஆடையினை உடல் முழுவதும் போர்த்துத் திருச்சிற்றம்பலம் திரியும் புத்தர்களம் ஆராய்ந்துணரும் அறிவிலாது
ஏனைச் செந்நெறியாளர்களை இழிமொழிகளால் இகழ்ந்துரைப்பர்.
அப்புன்மொழிகளைப் ‘புறம் கேளோம்’ என்ற மறையின்படி ஒரு
பொருளாகக் கொள்ளாத செம்மையாளர்கட்கு நன்மைபுரியும்
சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது, குருந்து, கோங்கு,
முல்லை, மல்லிகை, சண்பகம், வேங்கை ஆகிய மலர்களைக் கரிய
அகன்ற கண்களையுடைய மங்கையர்கள் கொய்கின்ற
திருக்கழுமலநகர் எனக் கூறலாம்.

     கு-ரை: உரிந்து - ஆடை உரிந்து. (உடையை நீக்கி) ஒரு
கூட்டத்தார் ஆடையே இல்லாதவர். மற்றொரு கூட்டத்தார் ஒன்றுக்கு
ஐந்தாக ஆடை போர்த்தவர் என ஒரு நயம். அத்துகில் - ஐந்து
என்னும் குறிப்பில் வந்த பண்டறிசுட்டு.