4093. |
கணங்களாய்
வரினுந் தமியராய் வரினு |
|
மடியவர்
தங்களைக் கண்டால்
குணங்கொடு பணியுங் குலச்சிறை குலாவுங்
கோபுரஞ் சூழ்மணிக் கோயில்
மணங்கமழ் கொன்றை வாளரா மதியம்
வன்னிவன் கூவிள மாலை
அணங்குவீற் றிருந்த சடைமுடி யண்ண
லாலவா யாவது மிதுவே. 4 |
. 4.
பொ-ரை: சிவனடியார்கள் கூட்டமாக வந்தாலும்,
தனியராக வந்தாலும், அவர்களைக் காணும்போது அவர்களின்
குணச்சிறப்புக்களைக் கூறி, வழிபடும் தன்மையுடைய குலச்சிறையார்
வழிபாடு செய்யும், கோபுரங்கள் சூழ்ந்த அழகிய கோயிலைக்
கொண்டதும், மணம் கமழும் கொன்றை, பாம்பு, சந்திரன், வன்னி,
வில்வம், கங்கை இவை விளங்கும் சடைமுடியுடைய சிவபெருமான்
வீற்றிருந்தருளுவதும் ஆகிய திருஆலவாய் என்னும் திருத்தலம்
இதுவே யாகும்.
கு-ரை:
அணங்கு - தெய்வப் பெண் (இங்கே கங்கை).
|