4103. |
காட்டினா
ரெனவு நாட்டினா ரெனவுங் |
|
கடுந்தொழிற்
காலனைக் காலால்
வீட்டினா ரெனவுஞ் சாந்த வெண்ணீறு
பூசியோர் வெண்மதி சடைமேல்
சூட்டினா ரெனவுஞ் சுவடுதா மறியார்
சொல்லுள சொல்லுநால் வேதப்
பாட்டினார் போலும் பந்தணை நல்லூர்
நின்றவெம் பசுபதி யாரே. 3 |
3.
பொ-ரை: இறைவர் காட்டில் வசிப்பவர். நாட்டில்
உள்ளவர். கொடுந்தொழில் செய்யும் இயமனைக் காலால் உதைத்தவர். நறுமணம் கமழும்
திருவெண்ணீற்றைப் பூசியுள்ளவர். வெண்ணிறப்
பிறைச் சந்திரனைச் சடைமேல் அணிந்துள்ளவர். இவ்வாறு எத்தனை
புகழ்ச்சொற்கள் உண்டோ அத்தனையும் சொல்லப் பெற்ற நால்
வேதங்களாகிய பாட்டின் பொருளானவர். அப்படித் தாம் எல்லாமாய்
இருக்கின்ற அடையாளம் பிறரால் அறியப்படாத தன்மையர்.
கு-ரை:
சொல்லுள சொல்லும் - எத்தனை புகழ்கள் உளவே
அத்தனையும் சொல்லப்பெற்ற (பசுபதியார்). சொல் - என்பது
சொல்லாகு பெயர்.
|