4104. |
முருகினார்
பொழில்சூ ழுலகினா ரேத்த |
|
மொய்த்தபல்
கணங்களின் துயர்கண்
டுருகினா ராகி யுறுதிபோந் துள்ள
மொண்மையா லொளிதிகழ் மேனி
கருகினா ரெல்லாங் கைதொழு தேத்தக்
கடலுணஞ் சமுதமா வாங்கிப்
பருகினார் போலும் பந்தணை நல்லூர்
நின்றவெம் பசுபதி யாரே. 4 |
4.
பொ-ரை: இறைவன் அழகிய சோலைகள் சூழ்ந்த
உலகத்தார் போற்றி வணங்க, நெருங்கிய பலவகைக் கணங்களின்
துயரினைக் கண்டு உருகி, உள்ள உறுதியோடு, ஒளிவிட்டுப்
பிரகாசிக்கின்ற தங்கள் உடல்கள் கருநிறம் அடையப் பெற்றாராகிய
திருமால் முதலிய தேவர்களெல்லாம் கைதொழுது வணங்க, அவரது
துன்பத்தினைப் போக்கக் கடலுள் எழுந்த நஞ்சினை அமுதம்போல்
வாங்கிப் பருகினவர். அப்பெருமான் திருப்பந்தணைநல்லூர் என்னும்
திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் பசுபதியார் ஆவார்.
கு-ரை:
வாங்கிப் பருகினார் - எடுத்துண்டார்.
|