4107. |
எற்றினா
ரேது மிடைகொள்வா ரில்லை |
|
யிருநிலம்
வானுல கெல்லை
தெற்றினார் தங்கள் காரண மாகச்
செருமலைந் தடியிணை சேர்வான்
முற்றினார் வாழு மும்மதில் வேவ
மூவிலைச் சூலமு மழுவும்
பற்றினார் போலும் பந்தணை நல்லூர்
நின்றவெம் பசுபதி யாரே. 7 |
7.
பொ-ரை: தமக்கு எத்தகைய துன்பமும் செய்யாத
தேவர்களையும், மண்ணுலக மாந்தர்களையும் துன்புறுத்தி, மோதி
அழித்தலைச் செய்த பகைவர்கள் காரணமாகப் போர் செய்து, தம்
திருவடிகளைச் சேரும் பொருட்டுத் தவம் முற்றினார்களாகிய
மூவர்கள் வாழ்கின்ற முப்புரங்களும், (அம்மூவர் தவிர) வேகும்படி
செய்து மூவிலைச் சூலமும், மழுவாயுதமும் ஏந்தியவர். அப்பெருமான்
திருப்பந்தணைநல்லூர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும்
சிவபெருமான் ஆவார்.
கு-ரை:
தங்களுக்கு எய்தும் நன்மை ஏதுமில்லாமலேயே
வானுலகையும் மண்ணுலகையும் மோதித் துன்புறுத்தியவர்.
(திரிபுரத்தசுரர்) என்பது முதலடியின் பொருள். எற்றுதல் - மோதுதல்.
தெற்றல் - அழிப்பித்தல். எற்றினார் - முற்றெச்சம்.
|