| 
         
          | 4113. | பாங்குடைத் 
            தவத்துப் பகீரதற் கருளிப் |   
          |  | படர்சடைக் 
            கரந்தநீர்க் கங்கை தாங்குத றவிர்த்துத் தராதலத் திழித்த
 தத்துவ னுறைவிடம் வினவில்
 ஆங்கெரி மூன்று மமர்ந்துட னிருந்த
 வங்கையா லாகுதி வேட்கும்
 ஓங்கிய மறையோ ரோமமாம் புலியூ
 ருடையவர் வடதளி யதுவே.            3
 |         3. 
        பொ-ரை: சிறந்த குணமுடைய பகீரதனுடைய தவத்திற்கு அருள்செய்வது, தனது படர்ந்த சடையில் மறைத்தருளிய கங்கை
 நதியினைத் தாங்குதலைத் தவிர்த்துப் பூமியில் சிறிதளவு பாயும்படி
 செய்த தத்துவனாகிய சிவபெருமான் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற
 இடம், மூன்று எரி வளர்த்துத் தம் அழகிய கைகளால் நெய், சமித்து
 போன்றவைகளை வார்த்து வேள்விகள் செய்கின்ற, ஓங்கிய புகழை யுடைய அந்தணர்கள் வாழ்கின்ற 
        திருஓமமாம்புலியூரில் உள்ள
 உடையவர் வடதளி என்னும் திருக்கோயிலாகும்.
       கு-ரை: 
        தத்துவன் - தத்துவ சொரூபியாய் இருப்பவன். |