4118. கள்ளவிழ் மலர்மே லிருந்தவன் கரியோ
       னென்றிவர் காண்பரி தாய
ஒள்ளெரி யுருவ ருமையவ ளோடு
     முகந்தினி துறைவிடம் வினவில்
பள்ளநீரவாளை
பாய்தரு கழனிப்
     பனிமலர்ச் சோலைசூ ழாலை
ஒள்ளிய புகழா ரோமமாம் புலியூ
     ருடையவர் வடதளி யதுவே.            9

     9. பொ-ரை: தேனுடைய தாமரை மலர்மேல் வீற்றிருக்கும்
பிரமனும், கருநிறமுடைய திருமாலும் இருவரும் காண்பதற்கு அரியவனாய் நெருப்புப் பிழம்பாய் நின்ற சிவபெருமான்
உமாதேவியோடு இனிது வீற்றிருந்தருளும் இடம், பள்ளத்தை
நோக்கிப் பாயும் நீரோடு வாளை மீன்கள் பாயும் வயல்களும்,
குளிர்ச்சி பொருந்திய மலர்ச்சோலைகள் சூழ்ந்த கரும்பு ஆலைகளும்
உடைய, மிக்க புகழுடைய அந்தணர்கள் வாழ்கின்ற திருஓமமாம்
புலியூரில் உடையவர் வடதளி என்னும் திருக்கோயிலாகும்.

     கு-ரை: பள்ளநீர் - பள்ளத்தில் தங்கியநீர். வாளைபாய் தரு -
வாளை மீன்கள் பாய்கின்ற.