4127. |
எடுத்தவன்
றருக்கை யிழித்தவர் விரலா |
|
லேத்திட
வாத்தமாம் பேறு
தொடுத்தவர் செல்வந் தோன்றிய பிறப்பு
மிறப்பறி யாதவர் வேள்வி
தடுத்தவர் வனப்பால் வைத்ததோர் கருணை
தன்னருட் பெருமையும் வாழ்வும்
கொடுத்தவர் விரும்பும் பெரும்புகழாளர்
கோணமா மலையமர்ந் தாரே. 8 |
8.
பொ-ரை: கயிலைமலையை எடுக்க இராவணனின்
செருக்கைத் தம் திருப்பாதவிரலை ஊன்றி அழித்தவர் சிவபெருமான்.
பின் அவன் ஏத்திப் போற்ற விருப்பத்துடன் வெற்றி வாளும், நீண்ட
வாழ்நாளும் அருளியவர். செல்வத்தோடு கூடிய பிறப்பும், இறப்பும்
அறியாதவர். சிவனை நினையாது தக்கன் செய்த வேள்வியைத்
தடுத்தவர். வனப்பு மிகுந்த உமாதேவியை ஒருபாகமாக வைத்தவர்.
யிர்களிடத்துக் கருணைகொண்டு தன்னருட் பெருமையையும்,
வாழ்வும் கொடுத்தவர். அத்தகைய பெரும்புகழையுடைய
சிவபெருமான் திருக்கோணமலையில் வீற்றிருந்தருளுகின்றார்.
கு-ரை:
வேள்விதடுத்தவர் - தக்கன் வேள்வியைத் தடுத்தவர்.
|