4132. |
திரைபுல்கு
கங்கை திகழ்சடை வைத்து |
|
வரைமக
ளோடுட னாடுதிர் மல்கு
விரைகமழ் தண்பொழில் வெள்ளடை மேவிய
அரைமல்கு வாளர வாட்டுகந் தீரே. 2 |
2.
பொ-ரை: நறுமணம் கமழும் குளிர்ச்சி பொருந்திய
சோலைகளையுடைய திருக்குருகாவூரில் வெள்ளடை என்னும் கோயிலில் வீற்றிருந்தருளுகின்ற
பெருமானே! இடுப்பில் விளங்கும்
ஒளிமிக்க பாம்பை ஆட்டுதலை விரும்பி நின்றீர். அலைகளையுடைய
கங்கையை ஒளிமிக்க சடையில் வைத்துக் கொண்டு மலைமகளோடு
ஆடுகின்றீர்.
கு-ரை:
அரவு ஆட்டு உகந்தீர் - பாம்பை ஆட்டுதலை
விரும்பினீர்.
|