| 
         
          | 4142. | சிட்டப்பட் 
            டார்க்கெளி யான்செங்கண் வேட்டுவப் |   
          |  | பட்டங்கட் டுஞ்சென்னி 
              யான்பதி யாவதுநட்டக்கொட் 
              டாட்டறா நல்லூர்ப் பெருமணத்
 திட்டப்பட் டாலொத்தி ராலெம் பிரானிரே.     6
 |  
           6. 
      பொ-ரை: சிவபெருமான் நியமம் தவறாது வழிபடுபவர்கட்கு எளியர். வேடுவக் கோலத்தில் 
      நெற்றிப்பட்டம் கட்டிய தலையினை
 உடையவர். அவர் விரும்பி வீற்றிருந்தருளும் இடமாவது
 நாட்டியங்களின் கொட்டு வாத்திய ஓசையும், திருவிழா முதலிய
 கொண்டாட்டங்களின் ஓசையும் ஒழியாத, திருநல்லூர் என்னும்
 திருத்தலத்தில் பெருமணம் என்னும் கோயிலாகும். எம் தலைவராகிய
 நீர் ஏனைய தலங்களிலும் விரும்பி வீற்றிருக்கின்றீர்.
       கு-ரை: 
        தலச்சிறப்பு: சிட்டப்பட்டார்க் கெளியன் - நியமம் தவறாது வழிபடுவர்களுக்கு எளியவன். வேட்டுவப் பட்டம் கட்டும்
 சென்னியான் - வேடுவக் கோலத்தில் நெற்றிப் பட்டம் கட்டிய
 தலையினை உடையவன். நட்டம் - நாட்டியங்களின். ஆட்டு - திரு
 விழா முதலான கொண்டாட்டங்களின் ஓசையும், கொட்டு வாத்திய
 ஓசையும். அறா - ஒழியாத. இட்டப்பட்டால் ஒத்திரால் ஏனைத்
 தலங்களிலும் மிகவிருப்பம் உடையவர் போல் காணப்படுகின்றீர். எம்
 பிரான் நீர் - எமது தலைவராகிய நீர். ஆல் - அசை
 |