4149. |
ஒவ்வாத
என்பே யிழையா வொளிமௌலிச் |
|
செவ்வான்
மதிவைத் தவர்சேர் விடமென்பர்
எவ்வா யிலுமே டலர்கோ டலம்போது
வெவ்வா யரவம் மலரும் விடைவாயே. 2 |
2.
பொ-ரை: யாவரும் ஏலாத என்பையே மாலையாகப் பூண்டு
இளம்பிறையைச் சிவந்த ஒளி பொருந்திய சடைமுடிமீது, செவ்வான்
மீது பிறை தோன்றுமாறு போலச் சூடிய, சிவபிரானது இடம்,
எவ்விடத்தும் இதழ் விரிந்து விளங்கும் காந்தள் மலர்கள் கொடிய
வாயினை உடைய பாம்புகளின் படங்கள் போல மலரும்,
திருவிடைவாய் என்பர்.
|