| 
       
         
          | 4152. | திரியும் 
            புரமூன் றையுஞ்செந் தழலுண்ண |   
          |  |  வெரியம் பெய்தகுன் 
              றவில்லி யிடமென்பர் கிரியுந் 
              தருமா ளிகைச்சூ ளிகைதன்மேல்
 விரியுங் கொடிவான் விளிசெய் விடைவாயே.    5
 |       5. 
        பொ-ரை: வானகத்தே திரிந்த திரிபுரங்கள் செந்தழலுண்ணுமாறு அம்பெய்த, குன்றவில்லியாகிய சிவபெருமானது
 இடம், மலை போன்ற மாளிகைகளின் சூளிகைகளில் கட்டப்பெற்று
 விரிந்தசையும் கொடிகள் 
        வானவரை அழைப்பது போலசையும்
 திருவிடைவாய் என்பர்.
 |